பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
சென்னை:நமது நாளிதழ் செய்தியை அடுத்து, கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட நான்கு மாவட்ட மின் நுகர்வோர், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, இம்மாதம் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், இம்மாதம் 6ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை கன மழை பெய்தது. சீரமைப்புதீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்ப

சென்னை:நமது நாளிதழ் செய்தியை அடுத்து, கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட நான்கு மாவட்ட மின் நுகர்வோர், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, இம்மாதம் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், இம்மாதம் 6ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை கன மழை பெய்தது.


சீரமைப்பு

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, கால அவகாசம் அளிக்குமாறு மின் வாரியத்திற்கு பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து நம் நாளிதழில், இம்மாதம் 9ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, மின் கட்டணம் கட்டுவதற்கு, 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தை ஆய்வு செய்தபின், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:

கன மழையால் சென்னை யில் பாதுகாப்பு கருதி, 71 மின் வழித்தடங்களில், 66 ஆயிரம் மின் இணைப்புகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இரவு முழுதும், 4,000 ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.மழை நீர் அகற்றப்பட்ட, 38 ஆயிரம் இணைப்புகளில் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டது. மீதமுள்ள, 28 ஆயிரம் இணைப்புகளுக்கு மின் வினியோகம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பாதிப்பு



டெல்டா மாவட்டங்களில் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. மழை காலத்தில் பொது மக்களுக்கு எந்தவித சிரமங்களும் வந்து விடக் கூடாது என்பதற்காக, மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து 15 நாட்கள் கால நீட்டிப்பு வழங்க, மின் வாரியத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிப்போர் மின் கட்டணம் செலுத்த, 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதன்படி, மின் கட்டணம் செலுத்த இம்மாதம், 8 முதல் 15ம் தேதி வரை கடைசி நாள் உள்ளவர்களுக்கு, 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை கடைசி தேதியாக உள்ளவர்கள் 30ம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X