பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா திருத்த சிறப்பு முகாம் 58 மனுக்கள் உடனடி தீர்வு

Added : நவ 12, 2021
Share
Advertisement
நெகமம்: தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் எம்மேகவுண்டன்பாளையத்தில் நடந்த, பட்டா திருத்த சிறப்பு முகாமில், 58 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றியம், செட்டியக்காபாளையம் மற்றும் நல்லட்டிபாளையம் ஊராட்சிகளுக்கான பட்டா திருத்த முகாம், எம்மேகவுண்டம்பாளையம் கிராமத்தில் நேற்று நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

நெகமம்: தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் எம்மேகவுண்டன்பாளையத்தில் நடந்த, பட்டா திருத்த சிறப்பு முகாமில், 58 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றியம், செட்டியக்காபாளையம் மற்றும் நல்லட்டிபாளையம் ஊராட்சிகளுக்கான பட்டா திருத்த முகாம், எம்மேகவுண்டம்பாளையம் கிராமத்தில் நேற்று நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அம்சவேணி பங்கேற்று மனுக்களை பெற்றார்.கணினி சிட்டாவில் விடுபட்ட விபரங்களை பூர்த்தி செய்தல், நில அளவை எண், உட்பிரிவு எண், பரப்பளவு, பட்டாதாரர் மற்றும் உறவினர்கள் பெயர், உறவு முறையில் ஏற்பட்ட பிழை ஆகியன குறித்து, 97 மனுக்கள் பெறப்பட்டன.முகாமில், 58 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 39 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, மண்டல துணை தாசில்தார் ராம்ராஜ், ஆர்.ஐ., லலிதா, செட்டியக்காபாளையம் ஊராட்சி தலைவர் ஜோதிமணி மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X