செய்தி செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைந்தது; விலை எகிறியது: தக்காளி விவசாயிகள் நிம்மதி

Added : நவ 12, 2021
Share
Advertisement
ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தக்காளி அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது; மழையால் மகசூல் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், பந்தல் காய்கறிகள் மற்றும் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டுதோறும், 200 ஏக்கர் வரையில் நாட்டு வகை மற்றும் வீரிய ஒட்டு ரக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில்,



ஆனைமலை: ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தக்காளி அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது; மழையால் மகசூல் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், பந்தல் காய்கறிகள் மற்றும் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டுதோறும், 200 ஏக்கர் வரையில் நாட்டு வகை மற்றும் வீரிய ஒட்டு ரக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆனைமலை ஒன்றியத்தில், ஜூலை இறுதியில் சாகுபடி செய்த, 110 நாட்கள் கொண்ட தக்காளி ரகம், தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. ஒன்றியம் முழுவதிலும் அறுவடைப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.தொடர் மழையின் காரணமாக, தக்காளி பறிப்பு பாதிக்கப்பட்டதால், மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து, 80 சதவீதம் குறைந்து, விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலையில் அறுவடையாகும் தக்காளிக்கு, மார்க்கெட்டில் அதிக கிராக்கி உள்ளது. மகசூல் குறைந்தபோதிலும், விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:மழையின்றி, நோய் மற்றும் பூச்சி தாக்குதலின்றி இருந்தால், ஒரு ஏக்கருக்கு, 15 முதல் 25 டன் வரையில் தக்காளி மகசூல் கிடைக்கும். தற்போது, தொடர் மழை காரணமாக, 80 சதவீதம் வரையில் மகசூல் குறைந்து, ஐந்து டன்னுக்கும் குறைவாகவே தக்காளி கிடைக்கிறது.தற்போது, ஒரு கிலோ தக்காளி, 50 ரூபாய்க்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. 14 கிலோ எடை கொண்ட பெட்டி, 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மழையால் மகசூல் குறைந்த போதிலும், விலை உயர்ந்துள்ளதால், பெரும் அளவு நஷ்டம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X