கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலா வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
சென்னை:'அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லாது' என அறிவிக்கக் கோரிய வழக்கில், சசிகலா தரப்பு வாதத்திற்காக, வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என, 2017ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி, சென்னை சிட்டி

சென்னை:'அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் செல்லாது' என அறிவிக்கக் கோரிய வழக்கில், சசிகலா தரப்பு வாதத்திற்காக, வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என, 2017ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜே.ஸ்ரீதேவி முன் நடந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, 'அ.தி.மு.க.,வில் உரிமை கோர, சசிகலாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை' என, பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.அ.தி.மு.க., தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சசிகலா தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. நீதிபதி விடுப்பு என்பதால் விசாரணை 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X