செய்தி செய்தி

தமிழ்நாடு

சூலூரில் 127 மையத்தில் இன்று வாக்காளர் முகாம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
சூலூர்: சூலூர் தொகுதியில், 127 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் இன்று துவங்குகிறது.தமிழகத்தில், விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் கடந்த, நவ.,1ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. புதிய வாக்காளர்களை சேர்க்க, நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.வரும், 2022 ஜனவரி, 1ம் தேதி

சூலூர்: சூலூர் தொகுதியில், 127 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் இன்று துவங்குகிறது.தமிழகத்தில், விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் கடந்த, நவ.,1ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. புதிய வாக்காளர்களை சேர்க்க, நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.வரும், 2022 ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும், இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல், நவ., 27 மற்றும்,28 ம் தேதிகளிலும் நடக்கிறது.சூலூர் தாலுகா துணை வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) திரிபுரசுந்தரி கூறுகையில், "சூலூர் தொகுதியில், 127 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடக்க உள்ளது. நாளையும் (இன்று), நாளை மறுநாளும் நடக்கும் முகாம்களில், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பிழை திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். அனைத்து மையங்களிலும், வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்,"என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X