தமிழ்நாடு

அன்னுாரில் அணிவகுக்கும் பிரச்னைகள் தீர்வு கிடைக்குமா! அமைச்சர் வருகைக்காக மக்கள் காத்திருப்பு

Updated : நவ 13, 2021 | Added : நவ 12, 2021
Share
Advertisement
அன்னுார்: அன்னுாரில் குறை கேட்க வரும் அமைச்சர் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அன்னூர் பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளும், 8000 வரிவிதிப்பு தாரர்களும் உள்ளனர். பழமையான நகரில் வளர்ச்சி பணிகள் இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.அன்னூர் மக்கள்
அன்னுாரில் அணிவகுக்கும் பிரச்னைகள்  தீர்வு கிடைக்குமா! அமைச்சர் வருகைக்காக மக்கள் காத்திருப்பு

அன்னுார்: அன்னுாரில் குறை கேட்க வரும் அமைச்சர் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அன்னூர் பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளும், 8000 வரிவிதிப்பு தாரர்களும் உள்ளனர். பழமையான நகரில் வளர்ச்சி பணிகள் இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
அன்னூர் மக்கள் கூறியதாவது:அன்னூரில் தினமும், 10 முதல் 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.தரம்பிரித்து, உரம் தயாரிக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அரசு 90 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. காக்காபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.விவசாயிகள் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்கால் திட்டம் முடங்கியது.
பல இடம் தேர்வு செய்தும், மக்கள் எதிர்ப்பால் திட்டம் முடங்கி உள்ளது.அன்னூர் குளத்தின் வடக்குப் பகுதி, அல்லிகுளம், சத்தி ரோடு, குன்னத்தூராம் பாளையம் என பல இடங்களில் டன் கணக்கில் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றமும், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த இடம் ஒதுக்கி, அங்கு குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
அன்னூரில் மூன்று கோடி ரூபாய் செலவில் மின்மயானம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. மின் மயானம் இல்லாததால், ஈரோடு மாவட்டம், புளியம்பட்டிக்கும் மற்றும் கோவை சரவணம்பட்டி மின் மயானத்திற்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.சாக்கடை வடிகால்கள், பாதியுடன் நிற்கின்றன. கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் பிளாண்ட் அமைக்காததால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும். நூலகத்தை தாலுக்கா நூலகமாக தரம் உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தீர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி அன்னுாரில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.அன்னூரில் 13 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது அன்னூர் அவிநாசி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதுவரை முடியவில்லை. விரைவில் பணிகளை முடித்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும்.இ-சேவை மையத்தில் அதிக ஊழிர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் அடுக்காக தங்கள் குமுறல்களை கொட்டினர்.அன்னூருக்கு இன்று பொதுமக்களிடம் மனு பெற வரும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X