செய்தி செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு திட்டம் வேளாண்துறை அழைப்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
சூலூர்: சூலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், நவ., 30க்குள்ளும், சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், டிச., 15 தேதிக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.மத்திய அரசு கடந்த, 2016--17ல் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியது. காரிப், ராபி என இரு பருவங்களில் வட்டாரத்துக்கு ஏற்ப பயிர்கள்

சூலூர்: சூலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், நவ., 30க்குள்ளும், சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், டிச., 15 தேதிக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.மத்திய அரசு கடந்த, 2016--17ல் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியது. காரிப், ராபி என இரு பருவங்களில் வட்டாரத்துக்கு ஏற்ப பயிர்கள் அறிவிக்கப்படும். அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள், அப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய செலுத்தி பயன்பெறலாம். அதன்மூலம், மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர் ஏற்பட்டு பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உரிய இழப்பீடு பெறமுடியும். இதுகுறித்து சூலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜய கல்பனா அறிக்கை:சூலூர் வட்டாரத்தில், மக்காச்சோளம் மற்றும் சோளம் பல எக்டரில் பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், காப்பீடு செய்து கொள்ள முன் வரவேண்டும். அப்போதுதான் இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டால், இழப்பீடு பெறமுடியும். ஒரு ஏக்கர் மக்காச்சோளத்துக்கு, ரூ. 450 பிரீமியமாக செலுத்தினால், ரூ. 30 ஆயிரம் வரை இழப்பீடு பெறலாம். இதில் சேர, வரும், நவ., 30ம் தேதி கடைசி நாளாகும். ஒரு ஏக்கர் மஞ்சள் சோளத்துக்கு, ரூ. 142 பிரீமியம் செலுத்தினால், 9 ஆயிரத்து, 442 ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். இதில் சேர டிச., 21ம் தேதி கடைசி நாளாகும். ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தகம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் ஆகியவற்றுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பிரீமியத்தை செலுத்தி பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு சூலூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X