செய்தி செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜி.என்.மில்ஸ் பிரிவு அருகே சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜி.என்.மில்ஸ் பிரிவில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.இதனால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகிறது.இந்நிலையில், ஜி.என்.

பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜி.என்.மில்ஸ் பிரிவு அருகே சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜி.என்.மில்ஸ் பிரிவில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.இதனால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகிறது.இந்நிலையில், ஜி.என். மில்ஸ் பிரிவில் சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள கடைகள் முன் உள்ள இடங்களை ஆக்கிரமித்து பந்தல் உள்ளிட்ட தடுப்புகளை போட்டுள்ளனர். போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இதை, சரிசெய்யகோரி கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை ஜி.என்.,மில்ஸ் பிரிவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட இடங்களை மீட்கும் பணி நடந்தது. கடைகளின் முன் நீட்டி வைக்கப்பட்டிருந்த பந்தல்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் அகற்றினர். பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X