பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா திருத்த சிறப்பு முகாம்30 மனுக்களுக்கு தீர்வு

Added : நவ 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மருதுாரில் அருகே நடந்த, பட்டா திருத்த சிறப்பு முகாமில், 178 மனுக்கள் பெறப்பட்டன. உடனடியாக, 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.காரமடையை அடுத்த மருதுார் ஊராட்சியில், பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிவகுமாரி தலைமைவகித்தார்.மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.

மேட்டுப்பாளையம்: மருதுாரில் அருகே நடந்த, பட்டா திருத்த சிறப்பு முகாமில், 178 மனுக்கள் பெறப்பட்டன.
உடனடியாக, 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.காரமடையை அடுத்த மருதுார் ஊராட்சியில், பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிவகுமாரி தலைமைவகித்தார்.மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா முன்னிலை வகித்தார். விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடம், பட்டாவில் திருத்தம், நிலம் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை, வருவாய்த்துறை பெற்றனர். முகாமில், 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். 178 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில், 30 மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு தாசில்தார் தங்கராஜ், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார்,வெங்கடேஷ், ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன், துணை தலைவர் தேன்மொழி பாபு மற்றும் வார்டு உறுப்பினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X