செய்தி செய்தி

தமிழ்நாடு

வாக்காளராகும் வாய்ப்பை தவறவிடாதீங்க!

Added : நவ 12, 2021
Share
Advertisement
அவிநாசி: 'விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, இன்றும், நாளையும் மற்றும், 27, 28 தேதிகளிலும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

அவிநாசி: 'விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, இன்றும், நாளையும் மற்றும், 27, 28 தேதிகளிலும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து தான், அரசியல் கட்சிகளின் வளர்ச்சி, எதிர்காலம் அமைந்திருக்கிறது.இளம் மற்றும் புதிய வாக்காளர்களின் பங்களிப்பு உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது.அந்தந்த வார்டுகளில் உள்ள பிரச்னையை, புதிய, இளம் வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவை நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.வார்டுகளில் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்க ஆற்றல் வாய்ந்த வேட்பாளர்களை, விருப்பு, வெறுப்பின்றி தேர்வு செய்வது அவசியம். இளம், புதிய வாக்காளர்கள் ஓட்டளித்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில், அந்தந்த வார்டுகளில் உள்ள கல்லுாரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள வேண்டும்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'பொதுவாக, கல்லுாரிகள் தோறும் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாணவ, மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தற்போது, கொரோனா கால்கட்டமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள் பெற்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X