சேறு, சகதியால் சங்கடம்; தீர்வு கண்டால் சந்தோஷம்!

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருப்பூர்: நொய்யல் ஆற்றில் துார் வாரும் பணிக்குச் சென்ற வாகனம் சேற்றில் சிக்கியது. இதையடுத்து பணி நிறுத்தப்பட்டது.வட கிழக்கு பருவ மழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து, நொய்யல் ஆற்றில் நீர் வருகிறது. இதையடுத்து நொய்யலில் உள்ள ஆக்கிரமிப்பு புதர்கள், மண் மேடுகளை அகற்றி மழை நீர் தடையின்றிச் செல்ல வழி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.அவ்வகையில்

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் துார் வாரும் பணிக்குச் சென்ற வாகனம் சேற்றில் சிக்கியது. இதையடுத்து பணி நிறுத்தப்பட்டது.வட கிழக்கு பருவ மழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து, நொய்யல் ஆற்றில் நீர் வருகிறது. இதையடுத்து நொய்யலில் உள்ள ஆக்கிரமிப்பு புதர்கள், மண் மேடுகளை அகற்றி மழை நீர் தடையின்றிச் செல்ல வழி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.அவ்வகையில் திருப்பூர் நகரப் பகுதிக்குள் நுழைந்து செல்லும் நொய்யல் ஆற்றின் பகுதியை பொதுப்பணித்துறை சார்பில் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.வளர்மதி பாலம் அருகே நொய்யல் பகுதியில் இயந்திரம் மூலம் துார் வாரும் பணி கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.நேற்று காலை அங்கு துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் எதிர்பாராமல் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து துார் வாரும் பணி நிறுத்தப்பட்டது. கிரேன் வரவழைக்கப்பட்டு, சேற்றில் சிக்கிய வாகனம் நீண்ட நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டது.மேலும் அப்பகுதியில் அதிகளவில் சேறு நிறைந்துள்ளதால் அங்கு துார் வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X