விபத்து தொடர்கதை; மக்கள் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து தொடர்கதை; மக்கள் மறியல்

Added : நவ 12, 2021
Share
பல்லடம்: பல்லடம் - மங்கலம் ரோடு, கல்லம்பாளையம் பகுதியில், அதிக விபத்துகள் நடப்பதை கவனத்தில் கொண்டு, போலீசார் வேக தடுப்புகள் வைத்துள்ளனர்.நேற்று, மங்கலம் நோக்கி வந்த லாரி, வேகத் தடுப்பு உள்ள இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் சரிந்தது. ரோட்டோரம் குடியிருப்புகள் உள்ள சூழலில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேகத்தடை அமைக்காததே இதற்குக்

பல்லடம்: பல்லடம் - மங்கலம் ரோடு, கல்லம்பாளையம் பகுதியில், அதிக விபத்துகள் நடப்பதை கவனத்தில் கொண்டு, போலீசார் வேக தடுப்புகள் வைத்துள்ளனர்.நேற்று, மங்கலம் நோக்கி வந்த லாரி, வேகத் தடுப்பு உள்ள இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் சரிந்தது. ரோட்டோரம் குடியிருப்புகள் உள்ள சூழலில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேகத்தடை அமைக்காததே இதற்குக் காரணம் என்று கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் கூறுகையில், 'வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். விபத்துகள் ஏற்பட்டபோது, கடந்த காலத்தில் இரண்டும் முறை மறியல் செய்துள்ளோம். கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
ஒவ்வொரு முறையும் தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றன. விபத்து ஏற்பட்டு இழப்பீடு பெறுவதைக் காட்டிலும், உயிர் இழப்பு ஏற்படாமல் தடுப்பதே அவசியம்்'' என்றனர்.பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், ''நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, விரைவில் வேகத்தடை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்தனர்.மறியலால், அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X