பொது செய்தி

தமிழ்நாடு

உடல்நல குறைவால் தஞ்சை ராமமூர்த்தி மரணம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளருமான தஞ்சாவூர் ராமமூர்த்தி, 87, உடல்நலக் குறைவு காரணமாக உயிர் இழந்தார்.தஞ்சையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 87; மூத்த அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். தொடக்கத்தில் திராவிட சிந்தனையில் இருந்தவர், பின் காங்கிரசில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். காமராஜர், இந்திரா போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.பின், காங்கிரசில் விலகி,
 உடல்நல குறைவால் தஞ்சை ராமமூர்த்தி மரணம்

தஞ்சாவூர்:மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளருமான தஞ்சாவூர் ராமமூர்த்தி, 87, உடல்நலக் குறைவு காரணமாக உயிர் இழந்தார்.

தஞ்சையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 87; மூத்த அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். தொடக்கத்தில் திராவிட சிந்தனையில் இருந்தவர், பின் காங்கிரசில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். காமராஜர், இந்திரா போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.பின், காங்கிரசில் விலகி, காமராஜ் காங்கிரஸ், ஜனதா தளம் போன்றவற்றில் பணியாற்றினார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்தவர், அதில் இருந்து விலகி, சமூக மற்றும் தமிழ்ப் பணியில் ஈடுபட்டு வந்தார். வயது மூப்பால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். இவரது உடல், தஞ்சாவூர் சீனிவாசபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, இன்று இறுதிச் சடங்கு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X