புதுடில்லி :நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி 'டோஸ்'களின் எண்ணிக்கை, 111 கோடியை இன்று (நவ.12) கடந்தது. நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கான தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது.
![]()
|
இந்நிலையில் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 111 கோடியை நேற்று கடந்தது. இரவு 8:00 மணி நிலவரப்படி, 111 கோடியே, 39 லட்சத்து, 10 ஆயிரம் டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 39 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
விரைந்து அனைவருக்கும் இரண்டு டோஸ்களையும் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்காக வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியது.இந்நிலையில் அந்த திட்டத்தின் கீழ், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நட்குர் என்ற கிராமத்திற்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று சென்றார்.கிராம மக்களின் வீடுகளுக்குள் சென்று அங்குள்ள மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். பின், கிராமத்தில் உள்ள தடுப்பூசி
முகாமிற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement