பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளக்காடானது வேலுார், குமரி

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021
Share
Advertisement
வேலுார்:ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், 10 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி, மக்கள் அவதிக்குள்ளாயினர். பள்ளிகொண்டா ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்காடானது. வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், நேற்று முன்தினம் மாலை 4:00 முதல் நேற்று அதிகாலை 1:00 மணி வரை கனமழை கொட்டியது.
 வெள்ளக்காடானது வேலுார், குமரி

வேலுார்:ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், 10 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி, மக்கள் அவதிக்குள்ளாயினர். பள்ளிகொண்டா ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்காடானது.

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், நேற்று முன்தினம் மாலை 4:00 முதல் நேற்று அதிகாலை 1:00 மணி வரை கனமழை கொட்டியது. வேலுார் கன்சால்பேட்டை, திடீர் நகர், இந்திரா நகர், முள்ளிப்பாளையம், மாங்காய் மண்டி, திருவள்ளுவர் நகர், சிவராஜ் நகரை நேற்று காலை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த 450 பேர் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, எட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாராபடவேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால், செவிலியர், டாக்டர், நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.




பொன்னை அணை

ஆந்திர மாநிலம், சித்துார் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கலவகுண்டா அணை நிரம்பி வினாடிக்கு, 10 ஆயிரத்து 188 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், பொன்னை அணை நிரம்பி வழிகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரோ போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.வி. குப்பம் அடுத்த கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்த தரைப்பாலம் மூழ்கியது.

வடுகந்தாங்கலில் இருந்து விரிஞ்சிபுரம் செல்லும் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 40 கி.மீ., துாரம் வாகனங்கள் சுற்றி செல்கின்றன.பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், அதன் துணை நதிகளும் நிரம்பி வழிகின்றன. மழை, வெள்ளத்திற்கு இரண்டு பேர் இறந்து உள்ளனர். 100 வீடுகள் சேதமடைந்தன.

இதேபோல, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களிலும் 10 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.


குமரியில் வெள்ளம்

குமரி மாவட்டத்தில் மூன்று நாட்களாக பகலில் லேசான வெயிலும், இரவில் பலத்த மழையும் கொட்டி வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.நேற்று முன்தினம் இரவு முழுதும் பெய்த பெருமழையால், பழையாற்றில் நேற்று மாலை 3:00 மணியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நாகர்கோவில் - திருநெல்வேலி சாலையில், ஒழுகினசேரியில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.சுசீந்திரத்தில் பழையாறு தண்ணீர், பரப்புவிளை, சபரீஷ் நகர், சிவா நகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. மாவட்டம் முழுதும் 11 முகாம்கள் திறக்கப்பட்டு, 410 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திற்பரப்பு அருவி காட்டாற்று வெள்ளம் போல் பாய்கிறது. குளங்கள் உடைப்பெடுத்து, பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாவட்டம் முழுதும் போலீசார், தீயணைப்பு மற்றும் பொதுப்பணி துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6:00 மணிக்கு 750 கன அடி தண்ணீர் பள்ளிகொண்டா ஏரிக்குள் புகுந்து வெளியேறியதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்காடானது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அங்கிருந்து, கால்வாய்களுக்கு செல்ல வழியில்லாமல் பள்ளிகொண்டா பாலாற்றுக்கு தண்ணீர் சென்றதால், விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை மூழ்கடித்து, ரங்கநாதர் கோவில் வரை தண்ணீர் சென்றது. சுவாமி தரிசனம் செய்ய தரைப்பாலத்தில் நடந்து சென்ற பக்தர்கள் பலர் நீச்சலடித்து தப்பினர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X