அரசு டாக்டர் தற்கொலை: கணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு டாக்டர் தற்கொலை: கணவர் கைது

Added : நவ 12, 2021
Share
ராமநாதபுரம்:கணவரின் சித்ரவதையால், பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். டாக்டரான அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம், வெளிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சுகந்தா, 31. ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். இவருக்கும், சடையன் வலசையைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன், 32 என்பவருக்கும் 2019 மார்ச் 30ல் திருமணம் நடந்தது.ஒரு மாதம்
 அரசு டாக்டர் தற்கொலை: கணவர் கைது

ராமநாதபுரம்:கணவரின் சித்ரவதையால், பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். டாக்டரான அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், வெளிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சுகந்தா, 31. ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். இவருக்கும், சடையன் வலசையைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன், 32 என்பவருக்கும் 2019 மார்ச் 30ல் திருமணம் நடந்தது.ஒரு மாதம் விடுப்புதிருமணத்தின்போது 70 சவரன் நகை, சீர்வரிசைகள் கொடுத்தனர்.

கணவரின் வற்புறுத்தலால், சுகந்தா இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார். தற்போது, மூன்றாவது முறையாக ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.மகேஸ்வரன் மருத்துவ மேற்படிப்பிற்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். பின், ஊர் வந்தவர், சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பு எடுக்கச் சொல்லி, டில்லி அழைத்து சென்றார்.

கடந்த அக்டோபரில் ஊர் வந்தவர்கள், ராமநாதபுரம் பெரியார் நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.இந்நிலையில், சுகந்தாவும் மேற்படிப்பு படிக்க விரும்பினார். அதற்கு மகேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வேலைக்கும் செல்ல வேண்டாம், என அடித்து சித்ரவதை செய்துள்ளார். இது குறித்து, தன் தாய் சரஸ்வதியிடம் சுகந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 7ம் தேதி வீட்டில் சுகந்தா, விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை, மகேஸ்வரன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சுகந்தா இறந்தார்.மகேஸ்வரனை கைது செய்ய வலியுறுத்தி, சுகந்தாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து, மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியைச் சேர்ந்தவர் முகுந்தன், 26; முடிதிருத்தும் தொழிலாளி. மனைவி ஜெயப்பிரியா, 21. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. ஏழு மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையில், ஜெயப்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

'முகுந்தன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் ஜெயப்பிரியா இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது' என, உறவினர்கள் புகார் அளித்தனர்.முகுந்தன் துன்புறுத்தலால் ஜெயப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக, விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ., அறிக்கை அளித்தார். நெல்லிக்குப்பம் போலீசார், முகுந்தனை நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X