ரூ.446 கோடி நன்கொடை வசூல்: கொடுத்தது யார் என தெரியாதாம்

Updated : நவ 14, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி :பெயர் வெளியிட விரும்பாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மாநில கட்சிகள் 446 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்து இருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியல் கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நன்கொடை அளிக்கும் தனி நபர்கள் மற்றும்
ரூ.446 கோடி நன்கொடை, கொடுத்தது யார் என தெரியாதாம்

புதுடில்லி :பெயர் வெளியிட விரும்பாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மாநில கட்சிகள் 446 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்து இருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியல் கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நன்கொடை அளிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட தேவையில்லை என்பது தற்போதைய நடைமுறையாக உள்ளது. தணிக்கை அறிக்கைஎனவே, நன்கொடை வசூல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கு மற்றும் தனிப்பட்ட நன்கொடை அறிக்கையில், பெரும்பான்மையான தொகை எங்கிருந்து வசூல் செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை.

ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் தங்கள் நன்கொடை வசூல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தொகையை விட, தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தொகை முறையே, 6.10 கோடி ரூபாய், 31.20 லட்சம் ரூபாய் மற்றும் 4.16 லட்சம் ரூபாய் குறைவாக உள்ளன.கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் பெயர் வெளியிட விரும்பாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 446 கோடி ரூபாய் தொகையை மாநில கட்சிகள் நன்கொடையாக வசூலித்துள்ளன.

இது கட்சிகளின் மொத்த நன்கொடை வசூலில் 55.50 சதவீதமாக உள்ளது.23 சதவீதம்தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 89 கோடி ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சி 82 கோடி ரூபாயும், ஒய்.எஸ்.ஆர்., காங்., 75 கோடி ரூபாயும், பிஜு ஜனதா தளம் 51 கோடி ரூபாயும், தி.மு.க., 45.50 கோடி ரூபாயும் பெயர் வெளியிட விரும்பாத தரப்பில் இருந்து வசூல் செய்துள்ளன.

தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் தாக்கல் செய்துள்ள நன்கொடை பட்டியலில்பெயர் உள்ளிட்ட விபரங்களுடன் வசூலிக்கப்பட்ட தொகை 185 கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது; இது அவர்களின் மொத்த வசூலில் 23 சதவீதமாக உள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
14-நவ-202112:45:53 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இருபதாயிரம் ரூபாய்க்கு கீழ் நன்கொடை அளித்திருந்தால் அவர்களின் விவரம் கட்சிகள் maintain பண்ண தேவையில்லை என்ற இந்த ஒரு சட்டம் போதுமே நம் அரசியல்வாதிகளுக்கு. கருப்பை வெள்ளையாக்க மிக சிறந்த வழி.
Rate this:
Cancel
jss -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-202120:51:29 IST Report Abuse
jss எல்லா ஊலிலும் திமுகவின் பங்கு அளப்பறியதாயிருக்கும். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம்
Rate this:
Cancel
Harsha Jack - Tamilnadu,இந்தியா
13-நவ-202120:30:40 IST Report Abuse
Harsha Jack தெரியாத்தனமாக வெள்ளந்தியாக அப்பிரானியாக எங்கே BJP கட்சியின் வசுல் ரகசியத்தை வெளியிட்டுவிட்டீர்களோ என நினைத்தேன். 😁
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X