செய்தி செய்தி

தமிழ்நாடு

விளைநிலத்தில் நீர் தேங்காமல் தவிர்க்கணும்

Added : நவ 12, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: தோட்டங்களில் சிறிய அளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்து, பயிர் சாகுபடிக்குள் நீர் தேங்காமல் தவிர்த்து, மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டுமென, தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கனமழையில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க, கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி கூறியதாவது:கிணத்துக்கடவு பகுதியில் வடகிழக்கு பருவமழை,

கிணத்துக்கடவு: தோட்டங்களில் சிறிய அளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்து, பயிர் சாகுபடிக்குள் நீர் தேங்காமல் தவிர்த்து, மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டுமென, தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கனமழையில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க, கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி கூறியதாவது:கிணத்துக்கடவு பகுதியில் வடகிழக்கு பருவமழை, கனமழையாக பெய்கிறது.
இதனால், தோட்டக்கலைத்துறை பயிர்கள் சாகுபடியில், நீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், மழை நீரை சேமிக்கவும் விளை நிலங்களில் அகலப்பாத்தி முறை அமைக்க வேண்டும்.பழ மர தோட்டங்களில் வட்டப்பாத்தி அமைக்க வேண்டும். வாழை மரங்கள் சாயாமல் இருக்க முட்டுக்கொடுத்து, கயிரால் கட்ட வேண்டும். அறுவடைக்கு தயாராக உள்ள காய்கறி பயிர்களின் அறுவடையை விரைந்து முடிக்க வேண்டும்.டி.விரிடி, சூடோமோனாஸ் போன்ற இயற்கை நுண்ணுயிர் உரங்கள் இடுவதால் செடிகளை, அழுகல் நோயில் இருந்து காப்பாற்றலாம்.மா, சப்போட்டா உள்ளிட்ட பழவகை மரங்களில், தேவையற்ற மற்றும் அதிகப்படியான கிளைகளை அகற்ற வேண்டும். பசுமை குடில்களில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி மழையினால், உண்டாகக்கூடிய நோய்களில் இருந்து காப்பாற்ற நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.நிழல்வலை குடிலில் உள்ள காய்கறி பயிருக்கு, இயற்கை நுண்ணுயிர் உரங்கள் இடுவதால், அழுகலை கட்டுப்படுத்தலாம். தோட்டங்கள் தோறும் சிறிய அளவு பண்ணைக்குட்டை அமைத்து, மழை நீர் சேகரிப்புக்கு மட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தலாம். மண் அரிப்பை தடுத்து, மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X