போலீசை அறையில் பூட்டி கைதியை மீட்ட நண்பர்கள்

Added : நவ 12, 2021
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன், 20. கடந்த ஜூன் மாதம் உச்சிப்புளியில் உள்ள ஒரு பேக்கரியில் சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தகராறு செய்தார். இது குறித்த புகாரில், போலீசார் தேடி வந்தனர்.இவர் மீது திருட்டு, அடிதடி வழக்குகள் உள்ளன. போலீசாருக்கு பயந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்தவர், 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார். கீழே விழுந்து

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன், 20. கடந்த ஜூன் மாதம் உச்சிப்புளியில் உள்ள ஒரு பேக்கரியில் சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தகராறு செய்தார்.

இது குறித்த புகாரில், போலீசார் தேடி வந்தனர்.இவர் மீது திருட்டு, அடிதடி வழக்குகள் உள்ளன. போலீசாருக்கு பயந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்தவர், 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார். கீழே விழுந்து கால் முறிந்த நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த போலீசார், மாரீஸ்வரனை கைது செய்தனர். மேல் சிகிச்சைக்காக, மதுரைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவமனையில், விசாரணை கைதிகள் வார்டில் மாரீஸ்வரன் அனுமதிக்கப்பட்டார். உச்சிப்புளி ஏட்டுகள் ராமமூர்த்தி, தாமோதரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு, ஏட்டுகள் இருவரையும் ஒரு அறையில் வைத்து பூட்டி, மாரீஸ்வரனை மர்ம நபர்கள் வார்டில் இருந்து துாக்கி சென்றனர். மதுரை மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.பணியில் கவனக் குறைவாக இருந்ததாக ஏட்டுகள் தாமோதரன், ராமமூர்த்தி ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கார்த்திக் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X