மகாகவி பாரதியார் விழா போட்டிகள்

Added : நவ 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில், மகாகவி பாரதியார் விழாவையொட்டி, போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதில், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு, 'பாரதியே உனக்கு ஒரு பாட்டு' என்ற தலைப்பில், கவிதை போட்டியும், 'பாரதியின் வாழ்வு வாக்கும்,' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடக்கிறது. மேலும், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்ற தலைப்பில்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில், மகாகவி பாரதியார் விழாவையொட்டி, போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதில், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு, 'பாரதியே உனக்கு ஒரு பாட்டு' என்ற தலைப்பில், கவிதை போட்டியும், 'பாரதியின் வாழ்வு வாக்கும்,' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடக்கிறது.
மேலும், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்ற தலைப்பில் கவிதை போட்டியும், 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும் நடக்கிறது.கல்லுாரி மாணவர்களுக்கு, 'ரவுத்திரம் பழகு' என்ற தலைப்பில், கவிதை போட்டியும், 'பாரதி காண விரும்பிய இந்தியா' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும் நடக்கிறது. கவிதை, 30 வரிகளுக்கு மிகாமலும், கட்டுரை, ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் அமைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லுாரிகளின் தலைமையாசிரியர், முதல்வர், ஆசிரியர்கள் வாயிலாக, தே.நா. சிவக்குமார், இணைச் செயலர், கம்பன் கலை மன்றம், 33, முத்து நகர், ந.க.புதுார், பொள்ளாச்சி, 642004 என்ற முகவரிக்கு கடிதமாகவோ அல்லது sivathena@gmail.com இ - மெயில் வாயிலாகவோ அல்லது நேரிலோ வரும், 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.இத்தகவலை, கம்பன் கலை மன்றம் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X