கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' டி.ஜி.பி., மீதான வழக்கில் 2ம் நாளாக பெண் அதிகாரி சாட்சி

Added : நவ 12, 2021
Share
Advertisement
விழுப்புரம்:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் தொல்லை வழக்கில், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி இரண்டாவது நாளாக சாட்சியம் அளித்தார்.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள்

விழுப்புரம்:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் தொல்லை வழக்கில், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி இரண்டாவது நாளாக சாட்சியம் அளித்தார்.

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆகியோர் மீது, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், முதல் சாட்சியான பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் இரண்டாவது சாட்சியான அவரது கணவர் ஆஜராகினர்.'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, சி.ஆர்.பி.சி., சட்டப்பிரிவு 242ன் கீழ் மனு தாக்கல் செய்தார்.

அதில், 'பெண் அதிகாரியின் கணவரான அருணாச்சல பிரதேச சுகாதார துறை செயலர், திருச்சி ஐ.ஜி., கள்ளக்குறிச்சி எஸ்.பி., மற்றும் உள்துறை செயலர் ஆகியோரிடம் முதல் விசாரணை முடிந்த பின்தான், பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெண் அதிகாரி இரண்டாவது நாளாக நேற்று, நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று, 'மாஜி டி.ஜி.பி., தரப்பு மனுவிற்கு, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X