மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

Added : நவ 12, 2021
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, கிருஷ்ணபிள்ளை காலனியில், வீடுகளுக்கு மத்தியில் உள்ள தனியார் இடத்தில், தனியார் மொபைல்போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணியை இரண்டாண்டுகளுக்கு முன் துவங்கியது.குடியிருப்பு பகுதியில் டவர் அமைத்தால், கதிர்வீச்சால் சூழல் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியை சேர்ந்த, அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் எதிர்ப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, கிருஷ்ணபிள்ளை காலனியில், வீடுகளுக்கு மத்தியில் உள்ள தனியார் இடத்தில், தனியார் மொபைல்போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணியை இரண்டாண்டுகளுக்கு முன் துவங்கியது.குடியிருப்பு பகுதியில் டவர் அமைத்தால், கதிர்வீச்சால் சூழல் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியை சேர்ந்த, அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்ததால், பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, டவர் அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பணி தொடரப்பட்டுள்ளது.இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உடுமலை தொகுதி இணைச் செயலாளர் காளிதாஸ், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் மற்றும் குடியிருப்புவாசிகள், வால்பாறை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.டவர் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துவது என்றும் மொபைல்போன் நிறுவனம் - குடியிருப்புவாசிகள் இருதரப்புக்கும் இடையே, வரும், 17ம் தேதி பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X