அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்துக்கு ரூ. வழங்க பழனிசாமி வலியுறுத்தல்

Added : நவ 12, 2021
Share
Advertisement
சென்னை ''விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவது அரசுக்கு நல்லதல்ல,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளில் மக்களை சந்தித்து, பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்; நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின் அவர் அளித்த பேட்டி:சென்னையில் மிக

குடும்பத்துக்கு ரூ.2,000 நிவாரணம்  வழங்க பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை ''விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவது அரசுக்கு நல்லதல்ல,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளில் மக்களை சந்தித்து, பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்; நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின் அவர் அளித்த பேட்டி:

சென்னையில் மிக கன மழை பெய்ததால், பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. அரசு இன்னும் முழு வீச்சில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டும். எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் நின்று உதவிகள் செய்வதில், அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது. அரசு இன்னும் விரைவாக தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.

சென்னையில் 200 வார்டுகளில் உள்ள கழிவு நீர் மற்றும் மழை நீர் கால்வாய்களை ஆய்வு செய்து, நீரை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின் மீது குற்றச்சாட்டு கூறி, பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.'ஸ்மார்ட் சிட்டி' முறைகேடு நடந்ததாக கூறும் முதல்வர், ஆதாரத்துடன் பேச வேண்டும்.வாக்குவாதங்கள், விவாதங்களில் ஈடுபடுவது அரசுக்கு நல்லதல்ல; வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X