லாரியை நிறுத்தி அதிரடி ரேஷன் அரிசி கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியை நிறுத்தி அதிரடி ரேஷன் அரிசி கடத்தல்

Added : நவ 12, 2021
Share
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து, ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து, இரண்டு மூட்டைகளை தனியாரிடம் விற்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி
 லாரியை நிறுத்தி அதிரடி ரேஷன் அரிசி கடத்தல்

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து, ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து, இரண்டு மூட்டைகளை தனியாரிடம் விற்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.அதில், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் செல்லும் லாரி, விருத்தாசலம் அடுத்த காணாது கண்டான் கிராமம் அருகே நிறுத்தப்படுகிறது.

அங்கு மொபட்டில் வரும் மர்ம நபர், லாரியில் இருந்து இரண்டு அரிசி மூட்டைகளை பெற்று, எடுத்துச் செல்லும் காட்சி உள்ளது. சுமைதுாக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர் உறுதுணையாக உள்ளனர். விருத்தாசலம் குடோன் கண்காணிப்பாளர் அசோக்ராஜ் கூறுகையில், ''குடோனில் இருந்து, பொருட்களை அனுப்பி வைப்பது மட்டுமே எங்கள் வேலை. வெளியில் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து எங்களுக்கு தெரியாது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தான், கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


இருவர் கைது

மதுரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், சக்கிமங்கலம் சமத்துவபுரம் பழைய வாட்டர் பிளான்ட் கட்டடத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கு, தலா 40 கிலோ எடையில் 679 மூட்டைகளில், 27 ஆயிரத்து 160 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்து.

மேலும் தலா 50 கிலோ எடையுள்ள 380 மூட்டைகளில் உடைக்கப்பட்ட 19 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது.கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, ஆட்டோ, மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X