கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொந்தரவு முதியவருக்கு '29 ஆண்டு'

Added : நவ 12, 2021
Share
Advertisement
கரூர்:பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 61; எலக்ட்ரீஷியன். இவர், வெள்ளிக்கிழமை தோறும், அவரது வீட்டில் பூஜை செய்வது வழக்கம். 2019ல், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் பூஜைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு பாலியல் தொந்தரவு

கரூர்:பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 61; எலக்ட்ரீஷியன். இவர், வெள்ளிக்கிழமை தோறும், அவரது வீட்டில் பூஜை செய்வது வழக்கம். 2019ல், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் பூஜைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் தனித் தனியாக வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

போலீசார் கணபதியை கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், கணபதிக்கு 29 ஆண்டுகள் சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும், தலா 2.50 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X