பாரபட்சமின்றி குட்டைக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

பாரபட்சமின்றி குட்டைக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை

Added : நவ 12, 2021
Share
உடுமலை: உடுமலை அருகேயுள்ள, கண்ணமநாயக்கனுார் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் கீதாவிடம் வழங்கிய மனு:பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு தற்போது நீர் வழங்கப்பட்டு வருகிறது. மழைப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சில, குளம், குட்டைகளுக்கு மட்டும் நீர் வழங்கப்படுகிறது.எனவே, மழைப்பொழிவு அதிகரித்து, உபரி நீர் இருந்தால், உரிய அரசு ஆணை

உடுமலை: உடுமலை அருகேயுள்ள, கண்ணமநாயக்கனுார் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் கீதாவிடம் வழங்கிய மனு:பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு தற்போது நீர் வழங்கப்பட்டு வருகிறது. மழைப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சில, குளம், குட்டைகளுக்கு மட்டும் நீர் வழங்கப்படுகிறது.எனவே, மழைப்பொழிவு அதிகரித்து, உபரி நீர் இருந்தால், உரிய அரசு ஆணை அடிப்படையில், அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்க வேண்டும்.கண்ணமநாயக்கனுார் குட்டைக்கு, உடுமலை கால்வாய் பிரியும், 9.5 கால்வாயில், தண்ணீர் திறந்து விட வேண்டும். இதன் வாயிலாக, சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே, இக்குட்டைக்கும் நீர் வழங்க வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X