விளையாட்டுத்திறனை ஊக்குவியுங்கள்| Dinamalar

'விளையாட்டுத்திறனை ஊக்குவியுங்கள்'

Added : நவ 12, 2021
Share
திருப்பூர்: 'டிசெட்' தலைவர் மற்றும் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் 'நிக்கான்ஸ்' வேலுசாமி கூறியதாவது:மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தவே, திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) கடந்த, 1992ல் துவங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி பள்ளியில், சர்வதேச வாலிபால் போட்டியை நடத்தினோம்.தற்போது, 'டிசெட்'

திருப்பூர்: 'டிசெட்' தலைவர் மற்றும் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் 'நிக்கான்ஸ்' வேலுசாமி கூறியதாவது:மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தவே, திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) கடந்த, 1992ல் துவங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி பள்ளியில், சர்வதேச வாலிபால் போட்டியை நடத்தினோம்.தற்போது, 'டிசெட்' தலைவர் என்ற வகையில் திருப்பூர் மாணவர்களிடையே உள்ள விளையாட்டுத்திறமையை வெளிப்படுத்த, ஆண், பெண்களுக்கு தனித்தனியாக வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு கோப்பைகள் வழங்கப்படுகின்றன.
15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி வளாகத்திலேயே இதற்கான பிரத்யேக மைதானம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.திருப்பூரில் இருந்து தேசிய அளவில் ஜொலித்த முன்னாள் வீரர்கள் ஸ்ரீதர்,ரமணராவ், தேவராஜ், ரகுபதி உள்ளிட்ட பலரை முன்மாதிரியாக கொண்டு பயிற்சி எடுக்கின்றனர். 20 ஆண்டுகளாக திருப்பூர் பள்ளிகளுக்கிடையே போட்டிகள் நடத்தி வருகிறோம்.ஆண்டுதோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் முறையே, 3 - 5 ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை அளிக்கிறோம். திறமை அனைவரிடம் உள்ளன. அதற்கான களம் இல்லை என்பதே நிதர்சனம். அதை நாங்கள் அளிக்கிறோம்.பெற்றோர்கள் பொருதார ரீதியாக பின்தங்கி இருப்பதால், திறமைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. வருங்காலங்களில், மாணவர்களின் விளையாட்டு திறனைஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X