மாவட்ட தடகளம்: 625 மாணவர் பங்கேற்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில், மாவட்ட அளவிலான தடகள வீரர், வீராங்கனை தேர்வு போட்டி நேற்று துவங்கியது.திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷ னர் (சட்டம்-ஒழுங்கு) அரவிந்த் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி இருவரும் போட்டிகளை துவக்கி வைத்தனர்.நேற்று, 14, 16, 18 மற்றும், 20 வயது

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில், மாவட்ட அளவிலான தடகள வீரர், வீராங்கனை தேர்வு போட்டி நேற்று துவங்கியது.திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷ னர் (சட்டம்-ஒழுங்கு) அரவிந்த் தலைமை வகித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி இருவரும் போட்டிகளை துவக்கி வைத்தனர்.நேற்று, 14, 16, 18 மற்றும், 20 வயது பிரிவுகளில், 100 மீ, 200 மீ, 400 மீ., ஓட்டம், தொடர் ஓட்டம், ஈட்டி, வட்டு, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது; 625 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.காலை, 9:00 மணிக்கு போட்டி நடந்து கொண்டி ருந்த நிலையில், தொடர் மழை பெய்தது. இதனால், போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு, இறுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 17ம் தேதி சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் இறுதி சுற்று போட்டி நடத்தப்படுமென, மாவட்ட தடகள சங்கத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X