சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் விழுந்து ஆசிரியை பலி

Added : நவ 12, 2021
Share
Advertisement
குன்னுார்:சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது மரம் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ஓதனட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 52; வண்டிச்சோலை நகராட்சி நடுநிலை பள்ளியில் ஆசிரியை. பணி முடித்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியது. சாலையோரத்தில் இருந்த கற்பூர மரம் சாய்ந்து,
 மரம் விழுந்து  ஆசிரியை பலி

குன்னுார்:சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது மரம் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் ஓதனட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 52; வண்டிச்சோலை நகராட்சி நடுநிலை பள்ளியில் ஆசிரியை. பணி முடித்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியது. சாலையோரத்தில் இருந்த கற்பூர மரம் சாய்ந்து, அவர் மீது விழுந்துள்ளது. தலை உட்பட உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்பகுதி மக்கள், மரத்தை அகற்றி அவரை மீட்டு, ஊட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; அங்கு இறந்தார். இவரது கணவர், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.மகேஸ்வரிமகேஸ்வரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X