பொது செய்தி

தமிழ்நாடு

அந்தமான் அருகே இன்று மீண்டும்! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு

Updated : நவ 13, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (7+ 4)
Share
Advertisement
சென்னை :வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் கரையை கடந்து ஓய்ந்துள்ள நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. அதேநேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'சென்னையின் பெரும்பாலான
அந்தமான்,இன்று  மீண்டும்! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு

சென்னை :வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் கரையை கடந்து ஓய்ந்துள்ள நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று
உருவாகிறது. அதேநேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வெள்ளப்பாதிப்பு, இன்றைக்குள் சீராகும்' என வருவாய்த்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொற்று பரவலை தடுக்க,
தமிழகம் முழுதும் 5,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 12 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார், நாகை, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி என, பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது.


வலுவிழந்ததுஇது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டி: சென்னையில் கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டது. அதேநேரத்தில் வங்கக்கடலில் அந்தமானின் தெற்கு பகுதியை ஒட்டி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக உள்ளது.இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வங்கக் கடலின் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு பகுதியில் வலுப்பெறலாம். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. எந்த இடத்தை நோக்கி செல்லும் என்பது உரிய நேரத்தில்
அறிவிக்கப்படும்.


மழை கொட்டும்இதற்கிடையில், ஆந்திர கடலோர பகுதியில் இருந்து, குமரி கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, பல மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
* வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலுார், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்

* திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

* வரும் 15ம் தேதி வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களிலும்; 16ம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


மந்திரி நம்பிக்கைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால், சென்னையில் பெரும்பாலான பகுதிகளிலும், பிற மாவட்டங்களில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் வடியாமல் தேங்கி உள்ளது. சென்னை மாநகராட்சி, பிற மாவட்ட உள்ளாட்சிகள் மற்றும் தமிழக வருவாய்த்துறை இணைந்து, வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.அதனால், சென்னையின் வெள்ள பாதிப்பு இன்றைக்குள் சீராகி விடும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


55 படகுகள்சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: சென்னையில் 534 இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தது. அதில், 204 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டு விட்டது. 22 சுரங்க பாதைகளில் 17 சுரங்க பாதைகளில் தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டு விட்டது.மற்ற பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சென்னைக்கு மட்டும் மீட்பு பணிக்கு, 55 படகுகள் கொடுத்தோம். அதன் வழியே மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்றைக்குள் நிலைமை சீரடையும். தமிழகம் முழுதும் ஓரளவு மழை குறைந்துள்ளதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.


மருத்துவ முகாம்கள்இந்நிலையில், வெள்ள பாதிப்பு, சீரமைப்பு பணிகள் குறித்து, தலைமை செயலர் இறையன்பு நேற்று தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கலந்துள்ளதால், பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ முகாம்களை இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, இன்று மட்டும் 5,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் 750; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் இதர மாவட்டங்களில், 4,250 முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 1,500 நடமாடும் மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காய்ச்சல், வயிற்றுப் போக்கு, தோல் வியாதி, பூச்சி மற்றும் விலங்குகள் கடித்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு; மூச்சுத்திணறல், மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு உடல் நலக்குறைவு மற்றும் தொற்று அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளும், 24 மணி நேரம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவி பெற, 104 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
13-நவ-202122:12:34 IST Report Abuse
R.MURALIKRISHNAN அப்ப இரண்டு நாளைக்கு முன்ன வந்தது டிரைலரா? மெயின் பிக்சர் இல்லியா?
Rate this:
Cancel
E Mariappan -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-202113:56:39 IST Report Abuse
E Mariappan PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
13-நவ-202111:34:25 IST Report Abuse
ராமகிருஷ்ணன் சென்னை வெள்ள நிவாரண பணிகள் நிச்சயம் இன்றைக்குள் முடியாது. முதல்வர் தொகுதியில் இன்னும் போட் சர்வீஸ் நடந்து கொண்டுள்ளது. சென்னை முழுவதும் டிரைனேஜ் மணம் கமழ்கிறது. தண்ணீர் வெளியேற வழிதெரியாமல் சாக்கடையில் பம்பு மூலம் செலுத்துகின்றனர், அது வேறு இடத்தில் பொங்கி வெளியேறிவிடுகிறது. துப்புரவு பணியாளர்கள், போலீஸ் புலம்பல் அதிகம் உள்ளது, எல்லாம் சரியானவுடன் அடுத்த மழை வர தயாராக உள்ளது, தன் வினை தன்னை சுடும், மழையப்பா சுடலையை சுட்டுவிடப்பா, சென்னையில் கொட்டிவிடப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X