சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜாவிடம் விசாரணை

Added : நவ 12, 2021
Share
Advertisement
கடலுார் : போக்சோ வழக்கில் கைதாகி, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பள்ளி தாளாளர் ஜேசுதாஸ் ராஜாவிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில் அமலா சிறுவர்- சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தங்கியிருந்த மூன்று மாணவியர், அக்., 25ம் தேதி காணாமல் போயினர்.இது குறித்து பள்ளி
 பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜாவிடம் விசாரணை

கடலுார் : போக்சோ வழக்கில் கைதாகி, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பள்ளி தாளாளர் ஜேசுதாஸ் ராஜாவிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில் அமலா சிறுவர்- சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தங்கியிருந்த மூன்று மாணவியர், அக்., 25ம் தேதி காணாமல் போயினர்.இது குறித்து பள்ளி தாளாளர் ஜேசுதாஸ் ராஜா, 65, விருத்தாசலம் ஆலடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து மூன்று மாணவிகளையும் கண்டு பிடித்தனர்.

விசாரணையில், மூவருக்கும் பள்ளி தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. ஜேசுதாஸ் ராஜா மீது 'போக்சோ' சட்டத்தில் ஆலடி போலீசார் வழக்கு பதிந்து 10 ம் தேதி கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், கைதான அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் ஜேசுதாஸ் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, கடலுார் போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, நேற்று கடலுார் அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சையில் இருந்த ஜேசுதாஸ் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். பின், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X