பொது செய்தி

தமிழ்நாடு

1.25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு டெல்டாவில் அமைச்சர்கள் ஆய்வு

Added : நவ 12, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை, தமிழக அமைச்சர்கள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், 1.25 லட்சம் ஏக்கர் நிலத்தில் தண்ணீர் தேங்கி, சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. பயிர்களை காப்பாற்ற
 1.25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு டெல்டாவில் அமைச்சர்கள் ஆய்வு

தஞ்சாவூர்:தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை, தமிழக அமைச்சர்கள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், 1.25 லட்சம் ஏக்கர் நிலத்தில் தண்ணீர் தேங்கி, சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துஉள்ளனர்.


ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, மகேஷ், மெய்யநாதன் அடங்கிய குழுவை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அக்குழுவினர் தஞ்சாவூர் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், விவசாயிகளுடன் பயிர் பாதிப்புகள், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.பின், தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து, சேத விபரங்களை கணக்கெடுத்தனர். அப்போது, 'பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்; வடிகால் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் தெரிவித்தனர்.


சம்பா பயிர்கள்

அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் மட்டும் 9,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. சேத விபரங்களை கணக்கு எடுத்து உள்ளோம். அவற்றை முதல்வரிடம் அளிக்க உள்ளோம். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் நடவடிக்கைகளில், வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X