சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலைகளை உடைத்தவர் மீது குண்டர் சட்டம்?

Added : நவ 12, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:-சிறுவாச்சூரில் சுவாமி சிலைகளை சேதப்படுத்திய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவில்களில் உள்ள சுவாமி சிலைகள், அக்டோபர் 6, 27 மற்றும் நவம்பர் 9 ஆகிய தேதிகளில் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, கடலுார் மாவட்டம்,

பெரம்பலுார்:-சிறுவாச்சூரில் சுவாமி சிலைகளை சேதப்படுத்திய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவில்களில் உள்ள சுவாமி சிலைகள், அக்டோபர் 6, 27 மற்றும் நவம்பர் 9 ஆகிய தேதிகளில் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, கடலுார் மாவட்டம், கால்நாட்டான்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த நாதன், 37, என்பவரை, 10ம் தேதி கைது செய்து, பெரம்பலுார் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி, சிறையில் அவர் உணவருந்த மறுத்து வந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.'நாதன் மனநோயாளி இல்லை' என மனநல டாக்டர் சான்று வழங்கி உள்ளார். மேற்கண்ட கோவில்களில் இதுவரை மூன்று முறை மொத்தம் 41 சிலைகளை, நாதன் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே, அக்டோபர் 8ல் கைது செய்யப்பட்டவர், சில நாட்களுக்கு முன் ஜாமினில் சென்றார்.மீண்டும் அக்டோபர் 27 மற்றும் நவம்பர் 9 ஆகிய நாட்களில் சுவாமி சிலைகளை உடைத்துள்ளார். இதனால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், சிலைகள் உடைப்பு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடத்திய 14 பேரை, பெரம்பலுார் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X