பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி ஆணை

Added : நவ 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : மின் பகிர்மான கழகத்தில் பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, பணி நியமன ஆணையை வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:தமிழகத்தில் முதல்வர் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஒவ்வொரு

விழுப்புரம் : மின் பகிர்மான கழகத்தில் பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, பணி நியமன ஆணையை வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:தமிழகத்தில் முதல்வர் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி வருகிறார். புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களில் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிகின்றனர்.

மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், மின்வாரிய மண்டல தலைமைப் பொறியாளர் பெர்ட்ரான்ட் ரஸ்சல், மேற்பார்வை பொறியாளர் குமாரசுவாமி, செயற்பொறியாளர் மதனகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X