தமிழ்நாடு

'ஆரஞ்சு' வகையில் நார் தொழிற்சாலை! உற்பத்தியாளர்கள் அதிருப்தி

Added : நவ 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சார்ந்த தொழில்களை, 'வெள்ளை' வகையில் இருந்து, 'ஆரஞ்சு' வகையில் சேர்த்து, 15 புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், தென்னை நார் தொழில் முடங்குமென, உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கர் பரப்பில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை நார் தொழிற்சாலைகளை, 'வெள்ளை'



பொள்ளாச்சி: தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சார்ந்த தொழில்களை, 'வெள்ளை' வகையில் இருந்து, 'ஆரஞ்சு' வகையில் சேர்த்து, 15 புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், தென்னை நார் தொழில் முடங்குமென, உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கர் பரப்பில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை நார் தொழிற்சாலைகளை, 'வெள்ளை' வரிசையில் இருந்து மாற்றி, அதிக மாசு என குறிப்பிடும் 'ஆரஞ்சு' வரிசையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது.இதற்கு, நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மத்திய கயறு வாரிய உறுப்பினர் கவுதமன் கூறியதாவது:தமிழகத்தை சேர்த்து, 14 மாநிலங்களில், 21 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன.
இதில், தமிழகத்தில், 8,200 தொழிற்சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் 'வெள்ளை' வரிசையில் இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும், 'ஆரஞ்சு' வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.தென்னை நார், 'காயர் பித்' தயாரிப்பில் எவ்வித ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. இத்தொழிலை 'ஆரஞ்சு' வரிசையில் சேர்த்துள்ளது வருத்தத்துக்குறியது. இதனால், தென்னை நார் சார்ந்த தொழில் அடியோடு அழியும்.முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். நார் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, மாசுக்கட்டுப்பாடு பிரச்னை இருந்தால், தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
'ஆரஞ்சு' வகையில் 15 கட்டுப்பாடுகள்தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பு:விவசாய நிலங்கள், திறந்த நிலையிலுள்ள நிலங்கள், நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள நிலங்களில், தென்னை நார், 'காயர் பித்' உலர வைக்கக்கூடாது. உரித்த தேங்காய் மட்டைகளை, மழைநீர் படாமல் இருக்கும் வகையிலான கொட்டகை அமைத்து, தளம் அமைத்து பரப்பிவிட வேண்டும்.தென்னை நார், 'பித்' உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளும், நிலத்தடியில் நீர் செல்லாத வகையிலான தளத்துடன் செயல்பட வேண்டும்.
வெளியேறும் கழிவு நீரை சேகரித்து சுத்திகரிக்க தனி கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.கழிவுநீரை நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் விடக்கூடாது. கான்கிரீட் தளம் அமைத்து அதில் மட்டுமே தென்னை நார், 'காயர் பித்' உலர வைக்க வேண்டும். உலர வைக்கும் பகுதிகளில், துாசு பரவுவதை தவிர்க்க அதிக உயரத்துக்கு வலைகள் அமைக்க வேண்டும்.இவ்வாறு, 15 கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X