பொது செய்தி

தமிழ்நாடு

வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் மின்சாரம் பாய்ந்து காவலாளி பலி

Added : நவ 12, 2021
Share
Advertisement
அபிராமபுரம் : மின்சாரம் பாய்ந்து தெரு நாய் உயிரிழந்த பிறகும், மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து, காவலாளி உயிரிழந்தார். திருவல்லிக்கேணி, டாக்டர் பெசன்ட் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 81. அவர், 4வது டிரஸ்ட் கிரஸ்ட் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை பணி முடிந்து

அபிராமபுரம் : மின்சாரம் பாய்ந்து தெரு நாய் உயிரிழந்த பிறகும், மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து, காவலாளி உயிரிழந்தார்.

திருவல்லிக்கேணி, டாக்டர் பெசன்ட் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 81. அவர், 4வது டிரஸ்ட் கிரஸ்ட் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை பணி முடிந்து மந்தைவெளி பஸ் நிலையம் அருகே, சாலையில் நடந்து சென்றார். அப்போது, அருகே இருந்த மின் இணைப்பு பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதில், சாலையில் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்தது.

அந்தப் பாதையில் சென்ற சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த அபிராமபுரம் போலீசார், சக்திவேலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், விபத்து குறித்து விசாரிக்கின்றனர். காவலாளி உயிரிழந்த அதே இடத்தில், சமீபத்தில் மின்சாரம் பாய்ந்து தெரு நாய் ஒன்று உயிரிழந்தது.

இது குறித்து, மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், மின் ஊழியர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மின்வாரியத்தின் அலட்சியமே, காவலாளியின் உயிரிழப்புக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X