சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல்; விருத்தாசலத்தில் வைரலாகும் வீடியோ

Added : நவ 12, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து, இரண்டு மூட்டைகளை தனியாரிடம் விற்கும் வீடியோ, சமூக வலைதளத்தில்
 லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல்; விருத்தாசலத்தில் வைரலாகும் வீடியோ

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து, இரண்டு மூட்டைகளை தனியாரிடம் விற்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.அதில், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் செல்லும், டி.என்.28- வி.0716 பதிவெண் லாரி விருத்தாசலம் அடுத்த காணாது கண்டான் கிராமம் அருகே நிறுத்தப்படுகிறது. அங்கு மொபட்டில் வரும் மர்ம நபர், லாரியில் இருந்து இரண்டு அரிசி மூட்டைகளை பெற்று, எடுத்துச் செல்லும் காட்சி உள்ளது. சுமைதுாக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர் உறுதுணையாக உள்ளனர்.

இது குறித்து விருத்தாசலம் குடோன் கண்காணிப்பாளர் அசோக்ராஜ் கூறுகையில், 'குடோனில் இருந்து பொருட்களை அனுப்பி வைப்பது மட்டுமே எங்கள் வேலை. வெளியில் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து எங்களுக்கு தெரியாது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தான், கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

நடவடிக்கை தேவை

விருத்தாசலத்தில் ரேஷன் அரிசி பதுக்கல் சம்பவம் அதிகரித்துள்ளது.பா.ஜ., பிரமுகர் கார்த்திகேயன் என்பவரது செராமிக் தொழிற்சாலையில் இட்லி அரிசியாக மாற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், சிதம்பரம் சாலை பூந்தோட்டத்தில், பியூலா என்பவரது வீட்டில் மண்ணெண்ணெய் பாரல்கள், ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருத்தாசலம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி உள்ளிட்ட பொருட்கள் சரிவர வினியோகம் செய்யப்பட்டதா என உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X