தமிழ்நாடு

தொடர் மழையால் மூழ்கிய பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு! வேளாண், தோட்டக்கலைத் துறையினர் தீவிரம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் வழியே ஓடும் தென்பெண்ணை, சங்கராபரணி மற்றும் 506 ஏரிகள் மாவட்ட விவசாயத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் வழியே ஓடும் தென்பெண்ணை, சங்கராபரணி மற்றும் 506 ஏரிகள் மாவட்ட விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது.

இம்மாவட்டத்தின் மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து உபரி நீர் ஏரிகளில் நிரம்பும்.மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1060.30 மி.மீ., ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638.11 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது.

கடந்த தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் 446.14 மி.மீ., பெய்தது. இது சராசரி மழை அளவை விட 89.48 மி.மீ., கூடுதலாகும். இதனால், ஓரளவிற்கு ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது.இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழையானது, மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடர்ந்து பெய்தது.

இதனால், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகளில், 296 ஏரிகள் முழு கொள்ளவு நிரம்பியது. மாவட்டத்தில் நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய மற்றும் தொடர் மழையால் தண்ணீர் விவசாய நிலங்களை சூழ்ந்தது.இதில், நெல், கரும்பு, உளுந்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான மரவள்ளி, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாவட்டத்தில் தொடர் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள பயிர்கள் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். வெள்ள நீர் வடிந்த பிறகு, பயிர் சேதம் குறித்த முழு விபரத்தை அதிகாரிகள் சேகரித்து தயார் நிலையில் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவிக்கும்போது, உடனடியாக நிவாரணம் வழங்குவதற்காக இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X