அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்குவாதம் செய்வது நல்லதல்ல அரசுக்கு பன்னீர்செல்வம் அறிவுரை

Added : நவ 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:''விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவது அரசுக்கு நல்லதல்ல,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளில் மக்களை சந்தித்து, பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்; நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின் அவர் அளித்த பேட்டி:சென்னையில் மிக
 வாக்குவாதம் செய்வது நல்லதல்ல அரசுக்கு பன்னீர்செல்வம் அறிவுரை

சென்னை:''விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவது அரசுக்கு நல்லதல்ல,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வில்லிவாக்கம் பகுதிகளில் மக்களை சந்தித்து, பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்; நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின் அவர் அளித்த பேட்டி:சென்னையில் மிக கன மழை பெய்ததால், பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. அரசு இன்னும் முழு வீச்சில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் நின்று உதவிகள் செய்வதில், அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது. அரசு இன்னும் விரைவாக தங்கள் பணிகளை செய்ய வேண்டும். சென்னையில் 200 வார்டுகளில் உள்ள கழிவு நீர் மற்றும் மழை நீர் கால்வாய்களை ஆய்வு செய்து, நீரை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியின் மீது குற்றச்சாட்டு கூறி, பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது.தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.'ஸ்மார்ட் சிட்டி' முறைகேடு நடந்ததாக கூறும் முதல்வர், ஆதாரத்துடன் பேச வேண்டும்.வாக்குவாதங்கள், விவாதங்களில் ஈடுபடுவது அரசுக்கு நல்லதல்ல; வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
13-நவ-202123:44:46 IST Report Abuse
John Miller அப்படியானால் நீ, எடப்பாடி, ஜெயக்குமார் வாய் கூசாமல் சொல்லும் பொய்களை மறுக்கக்கூடாதா முட்டாளே.
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
13-நவ-202111:38:49 IST Report Abuse
veeramani சென்னையில் இயற்கை கொடுத்த கொடையானந்த்து நல்ல மழை. இதை காப்பாற்ற தெரியவில்லை அங்குள்ள மக்களுக்கு. சென்னையி ல் வெள்ளம் கிடையாது. பெய்த மழை தண்ணீர் வடிவதற்கு வாருகால் இல்லவேயில்லை. பெருநகரம் மும்பை, இதைவிட இருபது செமீ மழை எல்லாம் தங்கி நிற்கிறது. தண்ணீர் வடிய வடிகால், சேமிக்க பல ஏரிகள் என மும்பை சரியாகி திட்டமிட்டுள்ளது. இதற்கு விஞ்சானம் கலந்த நுண் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. சென்னையை காப்பாற்றி வரும் இளைய தலைமுறைகளிடம் கொடுக்கவேண்டிய கடமை உள்ளது
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
13-நவ-202111:02:59 IST Report Abuse
SKANDH வேலையை செய்ய வேறு வழி தெரிந்தால் செய்வாங்கல் இல்லாவிட்டால் வாக்கு வாதம்தான் செய்வார்கள், திராவிடன் ஸ்டோக்க்குகளுக்கு மண்டை காலி. வாக்குவாதம் தான் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X