சம்பவம் செய்தி

தமிழ்நாடு

212 சவரன் பறிமுதல்: மூவர் கைது

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் வியாபாரியிடம், 1.8 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். 212 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை வடவள்ளியில் அக்., 30 இரவில், தங்க நகை வியாபாரி சண்முகத்தை இருவர் வழிமறித்து, 1.8 கிலோ எடையுள்ள 236 சவரன் தங்க நகை மற்றும் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வடவள்ளி போலீசார், 7ம் தேதி ஏழு பேரை கைது செய்தனர்.
 212 சவரன் பறிமுதல்: மூவர் கைது

கோவை:கோவையில் வியாபாரியிடம், 1.8 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். 212 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை வடவள்ளியில் அக்., 30 இரவில், தங்க நகை வியாபாரி சண்முகத்தை இருவர் வழிமறித்து, 1.8 கிலோ எடையுள்ள 236 சவரன் தங்க நகை மற்றும் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வடவள்ளி போலீசார், 7ம் தேதி ஏழு பேரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சிக்கந்தர் பாஷா, சம்சுதீன், அன்பரசு ஆகிய மூவரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 212 சவரன் நகை, 5.5 லட்சம் ரூபாய் மற்றும் மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர். ஐ.ஜி., சுதாகர் கூறுகையில், ''மொத்தம் 12 குற்றவாளிகளில், 10 பேரை கைது செய்துள்ளோம். இதில் சிக்கந்தர் பாஷா, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 129வது குற்றவாளி,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X