ரூ.237 கோடி ரூபாய் மதிப்பில் நந்தன் கால்வாய் திட்டம்; அமைச்சர் பொன்முடி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.237 கோடி ரூபாய் மதிப்பில் நந்தன் கால்வாய் திட்டம்; அமைச்சர் பொன்முடி தகவல்

Added : நவ 12, 2021
Share
செஞ்சி : 'நந்தன் கால்வாய்க்கு சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும்' என அமைச்சர் பொன்முடி கூறினார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனமலை ஏரி தொடர் மழையால் நிரம்பியது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின்

செஞ்சி : 'நந்தன் கால்வாய்க்கு சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும்' என அமைச்சர் பொன்முடி கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனமலை ஏரி தொடர் மழையால் நிரம்பியது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 1967ம் ஆண்டு கோவிந்தசாமி அமைச்சராக இருந்த போது திட்டம் கொண்டு வரப்பட்டது.தற்போது 25 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளேன்.

நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதில் முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் ஆகியோர் ஆர்வத்துடன் உள்ளனர்.இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளுக்கு தண்ணீர் வரும். 5,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். நந்தன் கால்வாயில் தண்ணீர் வர வேண்டுமென்றால் சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும்.

அதற்கு 237 கோடி ரூபாயை நிதி நிலை அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டம் நிச்சயமாக விரைவில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.ஆய்வின் போது கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், புகழேந்தி உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X