சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் அரசு பெண் டாக்டர் தற்கொலை: டாக்டர் கணவர் கைது

Added : நவ 12, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கணவர் சித்ரவதையால் அரசு பெண் டாக்டர் சுகந்தா 31, தற்கொலை செய்தார். கணவரான டாக்டர் மகேஸ்வரனை 32, போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் வெளிப்பட்டினம் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த கான்ட்ராக்டர் ரவி. இவரது மகள் சுகந்தா. ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். இவருக்கும், ராமநாதபுரம் அருகே சடையன்வலசையை சேர்ந்த
 ராமநாதபுரம் அரசு பெண் டாக்டர் தற்கொலை: டாக்டர் கணவர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கணவர் சித்ரவதையால் அரசு பெண் டாக்டர் சுகந்தா 31, தற்கொலை செய்தார். கணவரான டாக்டர் மகேஸ்வரனை 32, போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த கான்ட்ராக்டர் ரவி. இவரது மகள் சுகந்தா. ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். இவருக்கும், ராமநாதபுரம் அருகே சடையன்வலசையை சேர்ந்த டாக்டர் மகேஸ்வரனுக்கும் 2019 மார்ச் 30ல் திருமணம் நடந்தது.70 பவுன் நகை, சீர்வரிசைகள் கொடுத்தனர்.

கணவரின் வற்புறுத்தலால் சுகந்தா இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.இந்த நிலையில் இருதய பிரிவில் மேல்படிப்பு படிக்க சுகந்தா விரும்பினார். அதற்கு மகேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வேலைக்கும் செல்ல வேண்டாம், என அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

இதுகுறித்து தாயார் சரஸ்வதியிடம் சுகந்தா தெரிவித்து வந்தார். கணவரின் கொடுமை தாங்காமல் நவ.7ல் வீட்டில் சுகந்தா, விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மகேஸ்வரன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சுகந்தா இறந்தார்.மகேஸ்வரனை கைது செய்ய வலியுறுத்தி சுகந்தாவின் பெற்றோர், இந்திராநகர் பகுதி மக்கள் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எஸ்.பி., கார்த்திக்கை பெற்றோர் சந்தித்து மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.இந்நிலையில் சுகந்தாவை தற்கொலைக்கு துாண்டியதாக மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X