பொது செய்தி

தமிழ்நாடு

56 ஆயிரம் கன அடி தண்ணீர்; கீழணையில் வெளியேற்றம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கீழணையில் இருந்து கீழ் கொள்ளிடத்தில் 56 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரத்து 784 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கொம்பு மேல் அணையில்

காட்டுமன்னார்கோவில் : காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கீழணையில் இருந்து கீழ் கொள்ளிடத்தில் 56 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரத்து 784 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கொம்பு மேல் அணையில் இருந்து 42 ஆயிரம் கன அடி தண்ணீர் நேரடியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது.கல்லணையில் இருந்து கீழணை கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருச்சி, தஞ்சை மாவட்ட மழை தண்ணீருடன் சேர்த்து கீழணைக்கு 56 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.கீழணையில் நீர் மட்டம் 7 அடியாக உள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. கீழணையில் இருந்து கீழ் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவாக 56 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.50 அடியாக உள்ளது.

வீராணம் ஏரிக்கு வடவாறு மூலம் 1,250 கன அடியாக உள்ளது. இதில் வடவாறு ஜூரோ பாயிண்ட் மதகு வழியாக 300 கன அடி தண்ணீர் வெள்ளியங்கால் ஓடையில் திறந்து விடப்படுகிறது. வீராணம் ஏரிக்கு 950 கன அடி தண்ணீர் வரத்தாக இருந்தது. ஏரியில் இருந்து பூதங்குடி வி.என்.எஸ் மதகு வழியாக வெள்ளாற்றில் 1265 கன அடி தண்ணீரும், சென்னை குடிநீருக்கு 57 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X