சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஏ.டி.எம்., கார்டு கொடுத்து ஏமாற்ற முயன்றவருக்கு தர்ம அடி

Added : நவ 12, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுரில் போலி ஏ.டி.எம்., கார்டு கொடுத்து முதியவரை ஏமாற்ற முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நேற்று பகல் 1:00 மணியளவில் முதியவர் ஒருவர் பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், முதியவருக்கு பணம் எடுத்து கொடுத்து உதவினார். முதியவரின் ஏ.டி.எம்., கார்டை எடுத்துக் கொண்டு, அவரிடம் போலி
 போலி ஏ.டி.எம்., கார்டு கொடுத்து ஏமாற்ற முயன்றவருக்கு தர்ம அடி

கடலுார்: கடலுரில் போலி ஏ.டி.எம்., கார்டு கொடுத்து முதியவரை ஏமாற்ற முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நேற்று பகல் 1:00 மணியளவில் முதியவர் ஒருவர் பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், முதியவருக்கு பணம் எடுத்து கொடுத்து உதவினார். முதியவரின் ஏ.டி.எம்., கார்டை எடுத்துக் கொண்டு, அவரிடம் போலி கார்டை கொடுத்து, தப்பிச்செல்ல முயன்றார்.

அதிர்ச்சியடைந்த முதியவர் சத்தம் போட்டார்.அங்கிருந்தோர் வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, திருப்பாதிரிபுலியூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கடலுார் திருப்பாதிரிபுலியூர் தங்கராஜ் நகரில் வசிக்கும் கண்ணன் மகன் குமரன், 35; என்பது தெரியவந்தது.

கரூரைச் சேர்ந்த இவர், ஒன்னரை ஆண்டுகளாக கடலுாரில் வசித்தது தெரிந்தது. பிடிபட்ட வாலிபர் வேறு ஏதாவது ஏ.டி.எம்., திருட்டில் சம்மந்தப்பட்டுள்ளாரா என, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X