தமிழ்நாடு

314 ஏரிகளில் முழு கொள்ளளவு நிரம்பியது! மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 12, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட 314 ஏரிகள் முழுமையாக நிரம்பியது. நீர் நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் உள்ள தடுப்பணைகள் மூலம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட 314 ஏரிகள் முழுமையாக நிரம்பியது. நீர் நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் உள்ள தடுப்பணைகள் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ் கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள், 335 ஏரிகள் உள்ளன. அதேபோல், ஊராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 380 ஏரிகள் உள்ளன.

இரு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி 50 ஆயிரம் எக்டேருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. தற்போது கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்று பாசனத்திற்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.தொடர் மழையால் இரு அணைகளில் இருந்தும் ஆறுகள் வழியாக அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது ஆறுகளில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தோடுகிறது.

இதில், அனைத்து தடுப்பணையிலிருந்தும் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 335 ஏரிகளில் 158 ஏரிகள் முழுமையாக நிரம்பி கோடி வழியாக தண்ணீர் வழிந்தோடுகிறது. மேலும் 47 ஏரிகள் 75 சதவீதம், 48 ஏரிகளில் 50 சதவீதம், 56 ஏரிகள் 25 சதவீதம் அளவிற்கு தண்ணீர் மட்டம் தேங்கியுள்ளது. 26 ஏரிகளில் மட்டும் 25 சதவீதத்திற்கு குறைவாக தண்ணீர் தேங்கியுள்ளது.

அதேபோல், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளில், 156 ஏரிகள் முழுதும் நிரம்பியது. மேலும், 67 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல், 94 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேல், 55 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. 8 ஏரிகளில் மட்டும் 25 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் தேங்கியுள்ளது.

மாவட்டத்தில், விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய அணைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வழிந்தோடுவதாலும், தொடர்ந்து நீர் வரத்து ஏற்பட்டுள்ளதாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X