தமிழ்நாடு

கொள்ளையடித்த 212 சவரன் பறிமுதல்: கோவையில் மேலும் 3 பேர் கைது

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் வியாபாரியிடம், 1.8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டு, 212 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை வடவள்ளியில் அக்., 30 இரவில், தங்க நகை வியாபாரி சண்முகத்தை இருவர் வழிமறித்து, 1.890 கி.கி., எடையுள்ள 236 சவரன் தங்க நகை மற்றும் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொள்ளையர்களை



கோவை: கோவையில் வியாபாரியிடம், 1.8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டு, 212 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை வடவள்ளியில் அக்., 30 இரவில், தங்க நகை வியாபாரி சண்முகத்தை இருவர் வழிமறித்து, 1.890 கி.கி., எடையுள்ள 236 சவரன் தங்க நகை மற்றும் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொள்ளையர்களை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த, சிக்கந்தர் பாஷா, சம்சுதீன், அன்பரசு ஆகிய மூவரையும் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 212 சவரன் நகை, 5.5 லட்சம் ரூபாய் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். நகைகளை, ஐ.ஜி., சுதாகர் பார்வையிட்டு குற்றவாளிகளை பிடித்த வடவள்ளி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் தனிப்படை போலீசாரை பாராட்டினார்.ஐ.ஜி., சுதாகர் கூறுகையில், ''236 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 212 சவரன் நகை மற்றும் 5.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம். மொத்தம் 12 குற்றவாளிகளில், 10 பேரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள பாஷா, கோவை குண்டு வெடிப்பு வழக்கில், 129வது குற்றவாளி. பொதுமக்கள் பணம், நகையை எடுத்து செல்லும்போது மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X