தமிழ்நாடு

ஆறு மாதங்களில் ரூ.567 கோடி நிகர லாபம்; என்.எல்.சி., இந்தியா நிறுவனம் புதிய சாதனை

Added : நவ 12, 2021
Share
Advertisement
நெய்வேலி : என்.எல்.சி.,இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் (2021--22) முதல் அரையாண்டில் ரூ.567 கோடியை நிகர லாபமாக ஈட்டியதுடன், 6 மாத காலத்தில், தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து, 1562 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுக்கூட்டம் நெய்வேலியில் அந்நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார் தலைமையில்
 ஆறு மாதங்களில் ரூ.567 கோடி நிகர லாபம்; என்.எல்.சி., இந்தியா நிறுவனம் புதிய சாதனை

நெய்வேலி : என்.எல்.சி.,இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் (2021--22) முதல் அரையாண்டில் ரூ.567 கோடியை நிகர லாபமாக ஈட்டியதுடன், 6 மாத காலத்தில், தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து, 1562 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுக்கூட்டம் நெய்வேலியில் அந்நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமார் தலைமையில் கானொலி வாயிலாக நடந்தது. இந்நிறுவனம்,1.4.2021 முதல் 30.09.2021 வரையிலான நடப்பு நிதியாண்டின் (2021-22) முதல் அரையாண்டில், 1304 கோடியே 30 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

இது போன்று துணை நிறுவனத்தையும் சேர்த்து முதல் அரையாண்டில் ஒட்டு மொத்தமாக 1561 கோடியே 90 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.இந்நிறுவனத்தின் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்கள், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 117 கோடியே 70 லட்சம் யூனிட் பசுமை மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளன. இவற்றில் அந்தமான் தீவில் உற்பத்தி செய்த சுமார் 50 லட்சம் யூனிட் தவிர மீதமுள்ள மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி, மற்றும் நிலக்கரியை சொந்த மின் நிலையங்களின் தேவையை நிறைவு செய்தபின், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் பிற நிறுவனங்களுக்கு 18 லட்சம் டன் விற்கப்பட்டுள்ளது.மேலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள, இந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 19 லட்சம் டன் நிலக்கரி விற்பனை செய்து, ரூ.248 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்நிறுவனம் துணை நிறுவனத்துடன் இணைந்து ரூ.6536 கோடிக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.நிகர லாபத்தை பொறுத்தவரை துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ. 555 கோடியை ஈட்டியுள்ளது.

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் தனிப்பட்ட வர்த்தக அளவை பார்க்கும் போது, முந்தைய 2020-21ம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஈட்டிய தொகையான ரூ. 4236 கோடியை விட 27 சதவீதம் அதிகமாக, நடப்பு நிதியாண்டில் ரூ. 5377 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.வரிக்கு முந்தைய லாபத்தை பொறுத்தவரை, முந்தைய 2020-21ம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஈட்டிய தொகையான ரூ. 690 கோடியை விட 89 சதவீதம் அதிகமாக நடப்பு நிதியாண்டில் ரூ. 1305 கோடிக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.

நிகர லாபமும் முந்தைய ஆண்டில்,ஈட்டிய தொகையான ரூ. 313 கோடியை விட 81 சதவீதம் அதிகமாக ரூ.567 கோடி ஈட்டப்பட்டுள்ளது.மின் வாரியங்களுக்கு மின்சாரம் வழங்கியது தொடர்பான நிலுவைத் தொகையின் பெரும்பங்கு நடப்பு நிதியாண்டில் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,30.09.2020 அன்று நிலுவையிலிருந்த தொகையானரூ.9249 கோடி என்பது, 30.9.2021 அன்று ரூ.4895 கோடியாக குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X