சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூய்மை மேற்பார்வையாளர் இரண்டு பேர் 'சஸ்பெண்ட்'

Added : நவ 12, 2021
Share
Advertisement
கடலுார் : தமிழக முதல்வர் செல்லும் கடலுார் பாதையில் துாய்மை பணியை சரிவர செய்யாத மேற்பார்வையாளர்கள் 2 பேரை 'சஸ்பெண்ட்' செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலுார் மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளை இன்று பார்வையிடுகிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல்வர் செல்லும் பாதையில் பாதுகாப்பு

கடலுார் : தமிழக முதல்வர் செல்லும் கடலுார் பாதையில் துாய்மை பணியை சரிவர செய்யாத மேற்பார்வையாளர்கள் 2 பேரை 'சஸ்பெண்ட்' செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலுார் மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளை இன்று பார்வையிடுகிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல்வர் செல்லும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், துப்பரவு பணி நடந்து வருகிறது.

கடலுார் முதுநகர் மார்க்கெட் பகுதி மற்றும் முதுநகரில் மழை பாதிப்பு குப்பைகளை சரிவர அகற்றாமலும் உள்ளது. எனவே அலட்சியம் செய்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதாக துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் குருவாயூரப்பன், முத்து ஆகியோர் நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அரவிந்த் ஜோதி பிறப்பித்துள்ளார்.

மேலும் துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணராஜை 'சஸ்பெண்ட்' செய்ய சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு, செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரவணன் பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X