பொது செய்தி

தமிழ்நாடு

பாதிப்பு! டூ கனமழையால் கால்நடைகள் பாதிப்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
கன மழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 92 கால்நடைகள் இறந்தன; 851 வீடுகள் சேதமடைந்துள்ளன. தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலங்களில், வேளாண் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில தினங்களாக மழை கொட்டியது.பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம்
 பாதிப்பு! டூ  கனமழையால் கால்நடைகள் பாதிப்பு


கன மழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 92 கால்நடைகள் இறந்தன; 851 வீடுகள் சேதமடைந்துள்ளன. தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலங்களில், வேளாண் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில தினங்களாக மழை கொட்டியது.பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.பல இடங்களில் பாலம், தரைப்பாலம் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்;

போக்குவரத்து முடங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், பவுஞ்சூர், சித்தலப்பாக்கம் ஆகிய வட்டார பகுதிகளில், நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

மாவட்டத்தின் எட்டு தாலுகாக்களில் கன மழையால் கடந்த 11ம் தேதி வரை, ஐந்து பேர் இறந்தனர்.மூன்று பேர் காயமடைந்துள்ளனர். முழுமையாக 22 வீடுகள்; 435 வீடுகள் பாதி அளவு சேதமடைந்துள்ளன; 15 கால்நடைகள் இறந்தன.ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 87 தற்காலிக முகாம்களில், 3,808 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான வசதிகளை ஊராட்சி நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம்செய்து வருகிறது.மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கன மழையால் மொத்தம் 226 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகிஇருப்பதாக, வேளாண் துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. இந்த பாதிப்பு விபரங்கள், தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக, வாலாஜாபாத் ஒன்றியத்தில், 136 ஏக்கர் பரப்பு நெற்பயிர் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரை, 33 சதவீதத்திற்கும் அதிக பாதிப்புள்ள நெற்பயிர்கள் மட்டுமே கணக்கிடப்படுகின்றன.ன் மாவட்டத்தில் மொத்தம் 110 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்

என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மாவட்டம் முழுதும் விவசாய நிலங்களில், மழை நீர் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்து வருகிறோம். மழை நீர் வடிந்த உடன், வேளாண், வருவாய் துறை இணைந்து, கணக்கெடுப்பு நடத்தப்படும்.எல்.சுரேஷ்இணை இயக்குனர், வேளாண் துறை, செங்கல்பட்டுபயிர் காப்பீட்டுக்கு இறுதி நாள் அறிவிப்புதிருவள்ளூர் மாவட்டத்தில், 'ரபி' பருவத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

தற்போது மழை கடுமையாக பெய்து வருவதால், மழையில் பயிர்கள் சேதமடையும் நிலை உள்ளது. இழப்பீட்டை தவிர்க்க, பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு, மத்திய - மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. பயிர் காப்பீட்டிற்கு இறுதி நாள், இம்மாதம் 15ம் தேதி என்பதால், விவசாயிகள் நலன் கருதி, விடுமுறை நாளான இன்றும், நாளையும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அவற்றால் நடைபெறும்

பொது சேவை மையங்கள் வழக்கம் போல் இயங்கும் என, திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.பயிர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நிவாரண பணிகளுக்கு, விவசாயிகள், வேளாண் துறையில் கட்டணமில்லா 1800 4257 088 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.-திருவள்ளூரில் விபரம் சேகரிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக, குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பலத்த மழை பெய்து வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்டோரை தங்க வைக்க, 660 நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 36 முகாம்களில், 1,833 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் உணவு, மருத்துவ வசதி செய்து தருகிறது.பலத்த மழை காரணமாக, வீடு இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார்; ஒருவர்பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.மேலும், 39 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன.

இதுவரை, 24 குடிசை வீடுகள் முழுதும், 260 குடிசைகள் பாதியளவும் சேதம்அடைந்து உள்ளன.மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளன. பயிர் சேத விபரம் குறித்து, மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கணக்கெடுப்புக்கு பின்னரே, முழு சேத விபரம் தெரிய வரும் என, வேளாண் துறையினர் தெரிவித்து உள்ளனர்.மாவட்டத்தில், பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1,155 ஏரிகள் உள்ளன.

இவற்றில் நேற்று காலை வரை, 584 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 75 சதவீதம் 305 ஏரிகள்; 50 சதவீதம் 175 ஏரிகள்; 25 சதவீதம் 16 ஏரிகள்; 25 சதவீதத்திற்கு கீழ் 75 ஏரிகள் நிரம்பி உள்ளன.கடலோர பகுதிகளில் அதிக அளவு மழை பாதிப்பு ஏற்படும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு உள்ளதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக, 48 தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X