தமிழ்நாடு

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையை உக்கடம் பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த நிலையில், சில மாதங்களுக்கு முன், அப்பள்ளியில் படிக்க விருப்பமில்லை எனக்கூறி, மாநகராட்சி பள்ளிக்கு மாறினார். தற்போது பிளஸ் 2 படித்து



கோவை: கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையை உக்கடம் பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த நிலையில், சில மாதங்களுக்கு முன், அப்பள்ளியில் படிக்க விருப்பமில்லை எனக்கூறி, மாநகராட்சி பள்ளிக்கு மாறினார். தற்போது பிளஸ் 2 படித்து வந்தார்.கடந்த சில மாதங்களாகவே, மாணவி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உக்கடம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடிதம் சிக்கியதுமுன்பு படித்த பள்ளியில், மிதுன் சக்கரவர்த்தி,35, என்ற ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என, பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, பல்வேறு அமைப்பினர், பள்ளி மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.இவ்வழக்கு கோவை மாநகர மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது.
தற்கொலைக்கு முன், மாணவி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், மிதுன் சக்கரவர்த்தி உள்பட மூவர் பெயரை மாணவி குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, தற்கொலைக்கு துாண்டுதல், 'போக்சோ' பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.மாணவியின் தந்தை கூறுகையில், 'ஆசிரியரின் தொல்லை காரணமாக, அந்த பள்ளியில் படிக்க விருப்பமில்லாமல், எனது மகள் வேறு பள்ளிக்கு சென்றார். எனினும், மன உளைச்சலில், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.பள்ளிகளில் விசாரணைமுதன்மை கல்வி அதிகாரி கீதா கூறுகையில்,''பள்ளி கல்வித் துறை சார்பில் உரிய விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் தற்போது பேசக்கூடிய நிலையில் இல்லை. இருப்பினும், அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மாணவி படித்த பள்ளிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X